எந்தச்சாதி எந்தமதம் கேக்கவுமில்ல
ஏழைபணக் காரனென்று பாக்கவுமில்லை
எல்லோரையும் சரிசமமா தாக்குதுங்க கொரானா
வெள்ளிக்காசை சல்லிக்காசா மாத்துதுங்க கொரானா!
தாயிபுள்ளை தூரமாகிப் போச்சு பாருங்க
நோயுங்கூட உலகமயம் ஆச்சு பாருங்க
வீட்டுக்குள்ள அடங்கணுமாம் அரசு சொல்லுது
வீதியில முடங்கும் கூட்டம் விதியை எண்ணுது!
ஊரடங்கு போட்டதுமே வயிறு அடங்குமா
பசியடங்க மாத்திரைகள் போட முடியுமா?
அன்னாடங் காய்ச்சிகளின் அழுகை தீருமா
அரசாங்க காதுகளில் கதறல் விழுகுமா?
நோட்டுதந்தா ஓட்டு போடும் மந்தைகளாக
போட்டமுதல் மீட்டு தரும் சந்தைகளாக
விழிப்புணர்வு இல்லாம சனங்க வாழுது
விலகமறந்து வீதியிலே கூட்டம் கூடுது!
விஞ்ஞான சாதனைகள் மண்ணைக் கவ்வுது
விண்ணாளும் ஏவுகணை பல்லைக் காட்டுது
வல்லரசு நாடுகளும் வாயைப் பிளக்குது
வாங்கிவெச்ச ஆயுதத்தை எடைக்குப் போடுது!
கடவுளெல்லாம் ஓடிப்போயி கதவைச் சாத்துது
கதையளந்த கூட்டம்பாரு இழுத்து போத்துது
ஒட்டுமொத்த பூமியுமே பயந்து நடுங்குது
சோஷலிச அரசுதாங்க கையில் தாங்குது!
மருந்துவர்கள் எண்ணிக்கையை அதிகம் ஆக்குது
மருந்துகளை அரசுடைமை ஆக்கி வைக்குது
கடைக்கோடி மனுசனுக்கும் கல்வி மருத்துவம்
இலவசமா கிடைக்கும்படி சட்டம் வகுக்குது
மனுசனுக்கு அனுபவந்தான் பாடம் நடத்துது
மகத்தான தத்துவத்தை சொல்லி கொடுக்குது
வரலாறு முழுவதுமே வர்க்கப் போரடா?- இந்த
வல்லூறு கூட்டமினி சுக்கு நூறடா!
-வரத.வசந்தராஜன்
ஏழைபணக் காரனென்று பாக்கவுமில்லை
எல்லோரையும் சரிசமமா தாக்குதுங்க கொரானா
வெள்ளிக்காசை சல்லிக்காசா மாத்துதுங்க கொரானா!
தாயிபுள்ளை தூரமாகிப் போச்சு பாருங்க
நோயுங்கூட உலகமயம் ஆச்சு பாருங்க
வீட்டுக்குள்ள அடங்கணுமாம் அரசு சொல்லுது
வீதியில முடங்கும் கூட்டம் விதியை எண்ணுது!
ஊரடங்கு போட்டதுமே வயிறு அடங்குமா
பசியடங்க மாத்திரைகள் போட முடியுமா?
அன்னாடங் காய்ச்சிகளின் அழுகை தீருமா
அரசாங்க காதுகளில் கதறல் விழுகுமா?
நோட்டுதந்தா ஓட்டு போடும் மந்தைகளாக
போட்டமுதல் மீட்டு தரும் சந்தைகளாக
விழிப்புணர்வு இல்லாம சனங்க வாழுது
விலகமறந்து வீதியிலே கூட்டம் கூடுது!
விஞ்ஞான சாதனைகள் மண்ணைக் கவ்வுது
விண்ணாளும் ஏவுகணை பல்லைக் காட்டுது
வல்லரசு நாடுகளும் வாயைப் பிளக்குது
வாங்கிவெச்ச ஆயுதத்தை எடைக்குப் போடுது!
கடவுளெல்லாம் ஓடிப்போயி கதவைச் சாத்துது
கதையளந்த கூட்டம்பாரு இழுத்து போத்துது
ஒட்டுமொத்த பூமியுமே பயந்து நடுங்குது
சோஷலிச அரசுதாங்க கையில் தாங்குது!
மருந்துவர்கள் எண்ணிக்கையை அதிகம் ஆக்குது
மருந்துகளை அரசுடைமை ஆக்கி வைக்குது
கடைக்கோடி மனுசனுக்கும் கல்வி மருத்துவம்
இலவசமா கிடைக்கும்படி சட்டம் வகுக்குது
மனுசனுக்கு அனுபவந்தான் பாடம் நடத்துது
மகத்தான தத்துவத்தை சொல்லி கொடுக்குது
வரலாறு முழுவதுமே வர்க்கப் போரடா?- இந்த
வல்லூறு கூட்டமினி சுக்கு நூறடா!
-வரத.வசந்தராஜன்
No comments:
Post a Comment