Monday, August 25, 2025

பெண்ணைச் சமமாய் கொள்வோம்

ஆதித் தாயின் பாதம் 

ஆடித் திரிந்த காலம் 

மண்ணில் திரும்பிடுமா? 

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?


ஆதித் தாயின் பாதம் 

ஆடித் திரிந்த காலம் 

மண்ணில் திரும்பிடுமா? 

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?


கோல விழியின் ஓரம் 

பூணுகின்ற ஈரம் 

என்று மறைந்திடுமோ? 

ஆயுள் 

இன்னும் கரைந்திடுமோ?

ஆயுள் 

இன்னும் கரைந்திடுமோ?


கோல விழியின் ஓரம் 

பூணுகின்ற ஈரம் 

என்று மறைந்திடுமோ? 

ஆயுள் 

இன்னும் கரைந்திடுமோ?

ஆயுள் 

இன்னும் கரைந்திடுமோ?


அடர்ந்த வனத்திலே 

மனிதன் வாழ்ந்த தினத்திலே

வாழ்ந்த தினத்திலே 

தாயின் வழியிலே 

இனங்கள் தழைத்த போதிலே 

தழைத்த போதிலே


உடைமையென்ற ஒன்று அன்று இருந்ததில்லையே 

அடிமையென்று யாரும் அங்கு

உலவ வில்லையே! 

உடைமையென்ற ஒன்று அன்று இருந்ததில்லையே 

அடிமை என்று யாரும் அங்கு

உலவ வில்லையே! 


ஒன்று கலந்தே நாளும் 

உண்டு மகிழ்ந்த காலம்

மண்ணில் திரும்பிடுமா? 

இன்பம்

பெண்ணில் அரும்பிடுமா?     (ஆதி)


வேட்டை ஆடவும் 

உணவைப் பங்கு போடவும்

பங்கு போடவும் 

இணையைத் தேடவும் 

இணங்கும் நேரம் கூடவும் 

நேரம் கூடவும்


உரிமை யாவும் பெண்ணிடத்தில் 

ஆதி காலமே 

அடிமை யாக்கி மாற்றி வைத்த 

மீதி காலமே 

உரிமை யாவும் பெண்ணிடத்தில் 

ஆதி காலமே 

அடிமை யாக்கி மாற்றி வைத்த 

மீதி காலமே 


பேதம் இன்றி நாளும் 

கூடி வாழ்ந்த காலம் 

மண்ணில் திரும்பிடுமா? 

இன்பம் 

பெண்ணில் அரும்பிடுமா? 


இருவர் : ஆணுக்கு கீழ் பெண்ணை அடிமை செய்த மண்ணை 

கொன்று புதைத்திடுவோம் 

சமமாய் கொள்கை விதைத்திடுவோம்! 


இருவர் : வாழும் உயிரில் பேதம் 

வகுத்துச் சொல்லும் வேதம் 

கொன்று புதைத்திடுவோம் 

சமமாய் கொள்கை விதைத்திடுவோம்! 


-வரத.வசந்தராஜன் 

நன்னிலம்

No comments:

Post a Comment