வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம் (லல ல்லா)
வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம்(லல ல்லா)
கொடியாகவே உருவானதே... எங்கள் உயிரானதே!
கடல்மேலே நீந்தும் மீன்போலே
வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம்(லல ல்லா)
வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம்
ஹே.... பறந்தாடும் கொடி பிடிக்க
பறந்தாடும் கொடி பிடிக்க
மனதோரம் வெடி வெடிக்க
மனதோரம் வெடி வெடிக்க
எல்லாரும் கல்வி பெற
எல்லார்க்கும் வேலை வர
பொல்லாத பூமியிலே
பொதுவுடைமை பூத்துவர
தான தந்தன தானைத்தந்தன தான தந்தன தானைத்தந்தன
ஊரெங்கும் எங்கள் கொடி உயர்ந்தோங்கி பறந்தால்
நாடாளும் நரிகள் எல்லாம் நடுங்கும்
எங்கேனும் யாரோசிலர் மனமேங்கி அழுதால்
அங்கேயும் எங்கள் கால்கள் நெருங்கும்
எட்டாத தூரம்
தொட்டு விடக் கூடும்
இளமையின் வேகம்
எதனையும் வெல்லும்
இன்னுமென்ன மனக்கலக்கம்
எழு தோழா கொடி பறக்கும்!
முழக்கம் தடைகளை தகர்க்கும்
வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம் (லல ல்லா)
கொடியாகவே உருவானதே எங்கள் உயிரானதே!
கடல்மேலே நீந்தும் மீன்போலே
தந்தன தந்தா தன தான தந்தா தந்தன தந்தா தன தான தந்தா
தந்தன தந்தா தந்தன தந்தா தன தான தன தான
தாளாத பெருந் துயரம் தலைமீது சுமந்தால்
தோளாகி எங்கள் படை தாங்கும்
கேளாத காதுகளாய் அதிகாரம் இருந்தால்
கேட்கும்வரை எங்கள் குரல் முழங்கும்
பட்ட மரம் நாளை
மொட்டு விடக் கூடும்
திட்ட மிடு தோழா
வெற்றி வந்து சேரும்!
பேதங்கள் ஒதுக்கி வைப்போம்
பேராற்றல் கொண்டு நிற்போம்!
ஜெயிப்போம் சபதம் முடிப்போம்!
வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம் (லல ல்லா)
வெள்ளை நிறம் நடுவில் நட்சத்திரம்(லல ல்லா)
கொடியாகவே உருவானதே எங்கள் உயிரானதே!
கடல்மேலே நீந்தும் மீன்போலே(லலலா லலலா லலலா)
No comments:
Post a Comment