Saturday, May 15, 2021

கங்கைக் கரை பிணங்கள்...

கண்முடி... வாய்மூடி
போனதெங்கே மோடி?
காலம் வந்து கிழிக்குதடா
காவிகள் முகமூடி!

புனித கங்கையே
மனித பிணங்களாய்
போனது யாரின் புண்ணியம்?
நாயின் வாயிலே
தாயின் தலைக்கறி
பார்த்து பதறுதே பிள்ளையும்!

இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?

பொட்டலங் கட்டிய
சவங்களுக்கிடையே
போகுது உங்களின் பொய்மூட்டை!
நாத்தம் சகிக்கல
நாயும் சீண்டல
நிறுத்துங்கடா உங்க வாய் பாட்டை!

இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?

தடுப்பு ஊசிக்கு
ஆய்வு நடக்கையில்
தட்டும் கரண்டியும் தூக்கினோம்
மாட்டு சாணியும்
மருந்து கோமியம்
மணியை வேகமா ஆட்டினோம்?

இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?

ஆக்ஸிஜனில்லே
ஆம்புலன்ஸ் இல்லே
செத்து மடியுது உசுருங்க...
மாடுங்க செத்தா
மல்லுக்கு வருவீங்க
மனுசன் செத்தா மசுருங்க!

இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?

கணக்குல வரல
கண்ணுல காட்டல
மர்மம் பிரதமர் நிதியில...
சேர்ந்த பணத்துல
மிதக்கும் பிணத்துக்கு
கருமம் பண்ணலாம் திதியில!

இதுதானா இதுதானா!
ராம ராஜ்ஜியம்?
உலகம் காறி துப்புதடா
உங்க லட்சணம்?
-வரத.வசந்தராஜன்






No comments:

Post a Comment