சிக்குபுக்கு ரயிலு ஒன்னு சீறி வருதுடோய்! -தம்பி
எக்கச்சக்க சாமி அதிலே ஏறி வருதுடோய்!
கடவுளுங்க போகமட்டும்
கச்சிதமா இருக்கை வெச்சி
பயணத்துல களைப்புவந்தா
பக்குவமா படுக்க வெச்சி (சிக்குபுக்கு)
சிவனோட குடும்பத்துக்கு
பெட்டியொன்னு ஒதுக்கியாச்சு
டிடிஆரு பாத்துடாம
'மூஞ்சுறை'யும் பதுக்கியாச்சு (சிக்குபுக்கு)
ஆதாரு காட்டாமலே
அவதாரம் பத்துபேரு
கூட்டிவந்த பெருமாளு
கூட்டுக்குடும்ப கெத்துபாரு (சிக்குபுக்கு)
பெண்களுக்கு தனியாக
பெட்டியொன்னு இருக்குதுங்க
கணக்கில்லாத பெண்தெய்வம்
படிவரைக்கும் நெறுக்குதுங்க (சிக்குபுக்கு)
சூலம் வேலு வில் அம்பு
வகைவகையா ஆயுதமாம்
தேடிப்பிடிச்சு லக்கேஜில்
ஏற்றிவர தாமதமாம் (சிக்குபுக்கு)
அப்பர்பெர்த்தில் அனுமாரு
மிடில்பெர்த்தில் பைரவரு
சேவல் மயில் பாம்புவரை
லோயர்பெர்த்தில் வெகுஜோரு (சிக்குபுக்கு)
நவக்கிரக சாமிகளும்
முன்பதிவு செஞ்சிருக்கு
நேருக்குநேர் பாத்துக்காம
சீட்டுகளை மாத்திருக்கு (சிக்குபுக்கு)
ர்
No comments:
Post a Comment