பருந்து முட்டையை பாதுகாத்து
கோழிக்கென்ன லாபம்?
பாஜகவை நம்பி போனா
வாழ்க்கை கெட்டு போகும்?
ராமனுக்கு கோவில் கட்ட
கல்லைத் தூக்க சொல்லும்
சமூகநீதி பேச்செடுத்தா
கல்லெறிஞ்சு கொல்லும்!
இந்துவாக இணைய சொல்லி
இந்தி மொழியில் பேசும்!
சாதிச் சண்டை நடக்கும் போது
மௌன விரதம் இருக்கும்! (பருந்து)
ஐபிஎஸ் வேலை விட்டு
ஆடு மேய்க்க சொல்லும்!
ஆமாஞ்சாமி போடும் வரைக்கும்
அஞ்சு பத்து தள்ளும்!
கோயபல்ஸை நகல் எடுத்து
மாரி தாஸா ஆக்கும்!
கொட்டியளந்த பொய் கதைக்கு
நாடே வாயை பொளக்கும்! (பருந்து)
ஆட்டம் போட்ட அத்வானி
அட்ரஸ் எங்க காணல
தேர்தல் முடிஞ்சா ராமனையும்
தேடி வர ஆளில்ல?
'ஜீ'யின்னு சலாம் வெக்கும்
நம்பிடாத தம்பி!
'சீ'யின்னு விரட்டும் போது
வெம்பிடாத தம்பி! (பருந்து)
பஞ்சாமிர்த புட்டிக் குள்ள
அபினை அடைச்சு வைக்கும்
ஆளில்லாத நேரம் பார்த்து
தாலி அறுத்து விக்கும்!
தனக்குத்தானே குண்டு வீசி
விளம் பரத்தை தேடும்!
அடுத்தவனை பழியைப் போட்டு
கல வரத்தைத் தூண்டும்! (பருந்து)
மிஸ்டு காலு கொடுத்தாலே
மெம்ப ராக சேர்க்கும்
மன்னிப்பு கடிதம் எழுதி
வாய் வீரம் காட்டும்!
தாமரையை மலர வைக்க
தலை கீழா நிக்கும்! -இந்த
தகிடுதத்தம் புரிய லன்னா
தலை முறையே திக்கும்! (பருந்து)
-வரத.வசந்தராஜன்
நன்னிலம்
No comments:
Post a Comment